தமிழ்நாடு

கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள வைஷாலி, இந்தியாவின் 3 -ஆவது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர்.

முதல்வர் தன எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இந்தியாவின் மூன்றாம் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகவும் உயர்ந்துள்ள வைஷாலிக்கு எனது பாராட்டுகள்!

2023-ஆம் ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

உங்கள் தம்பி பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்றதன் மூலம்,அத்தொடருக்குத் தகுதி பெற்ற முதல் உடன்பிறந்தவர்கள் என்ற வரலாற்றைப் படைத்தீர்கள்.

அதற்கு மேலும் மணிமகுடமாகத் தற்போது நீங்கள் கிராண்ட்மாஸ்டர் ஆகி, முதல்முறையாக உடன்பிறந்தோர் இருவர் கிராண்ட்மாஸ்டராக இருக்கும் லசாதனையைப் படைத்துள்ளீர்கள். 

உங்கள் சாதனைகளால் நாங்கள் மிகவும் பெருமைகொள்கிறோம். உங்களது தனிச்சிறப்பான பயணம் செஸ் ஆர்வம் கொண்ட பலருக்கும் ஊக்கமாக விளங்குகிறது. 

நமது தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கான அடையாளமாகத் திகழ்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT