தமிழ்நாடு

தீவிர புயலாக மாறுகிறது மிக்ஜம் புயல்: வானிலை மையம்

தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜம் புயலானது தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

DIN


புது தில்லி: தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜம் புயலானது தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மிக்ஜம் புயலானது நாளை தீவிர புயலாக மாறுகிறது. இதனால், இந்த புயலின் போது காற்றின் வேகமானது மணிக்கு 90 - 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தீவிர புயலாக மாறி, செவ்வாய்க்கிழமை காலை ஆந்திர தெற்கு கடலோர பகுதிகளான நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 310  கிலோ மீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் புயலானது நிலைகொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து, நாளை வட தமிழகம் பகுதிக்கு வந்தடையும். பிறகு, செவ்வாயன்று காலை கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் வேகத்தில், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக்கொலை; இளைஞர் கைது

விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்

குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய செயலி: முதல்வர் ஸ்டாலின்

விஜயகாந்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT