தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது 'மிக்ஜம்' புயல்!

DIN

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.

தற்போது 5 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் 'மிக்ஜம்' புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம்' புயலானது வடமேற்கு திசையில் மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாளை (டிச. 4) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திரம், அதையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும்.

இதையடுத்து வடக்கு திசையில் நகா்ந்து ஆந்திர மாநிலம், நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை (டிச. 5) முற்பகலில் புயல் கரையைக் கடக்கும். அப்போது, 100 கி.மீ. வேகத்தில காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (டிச.3) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், திருவள்ளூா் தொடங்கி கடலூா் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். அதேபோல், வேலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT