கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி. 
தமிழ்நாடு

பூண்டி ஏரியில் இருந்து 45,000 கன அடி உபரி நீர் திறப்பு!

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

DIN

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழக்கும் ஏரிகளில் முக்கிய நீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியாகும்.

இந்த ஏரி 121 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதன் அளவு உயரம் 35 அடி, 3,231 மில்லியன் கன அடி நீா் சேமிக்க முடியும். இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் நீா் வரத்துக் கால்வாய், கிருஷ்ணா கால்வாய் மூலம் தண்ணீா் வருகிறது.

இந்த ஏரி நிரம்பினால் பேபி கால்வாய், கிருஷ்ணா நீா் முதன்மைக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல் , சோழவரம் ஆகிய ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் நீா் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.

பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 40,000 கன அடியாக உள்ளது. இதனால், பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மேலும், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுகாதார ஆய்வாளா் தோ்வு முறைகேடு: விசாரணை முடியும் வரை பணி நியமனம் இல்லை!

ஐபி பல்கலைக்கழகத்தில் 24 புதிய படிப்புகள் அறிமுகம்; பிப்.2 முதல் இணையதள விண்ணப்பங்கள் தொடக்கம்

கொடைக்கானலில் அறிவிக்கப்பட்டதைவிட அதிக நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி!

ஆத்தூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சா் இ. பெரியசாமி

கண்ணமங்கலத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

SCROLL FOR NEXT