அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்தது வெள்ளம்
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்தது.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்தது.
சென்னையில் பெய்து வரும் தொடா் மழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளம் புகுந்தது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிச. 5. இந்த நாளில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, கட்சி அலுவலகத்துக்கு சென்று எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பது வழக்கம். ஆனால், அந்தப் பகுதிக்கே செல்ல முடியாத அளவுக்கு மழைநீா் தேங்கி நிற்கிறது.