தமிழ்நாடு

தாம்பரத்தில் போக்குவரத்துக்கு தடை: காவல்துறை அறிவிப்பு

DIN

சென்னை: தாம்பரத்தில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதித்து தாம்பரம் காவல்துறை அறிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிறு மாலைமுதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும், மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளது.

தாம்பரம் காவல்துறைக்கு உள்பட்ட ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி பிரதான சாலை, ஓஎம்ஆர் சாலை மற்றும் முக்கிய சாலைகளில் பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்துள்ளது.

இதனை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று தாம்பரம் காவல் துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகள்:

1. சோழிங்கநல்லூர் சந்திப்பு முதல் மேடவாக்கம் குளோபல் மருத்துவமனை வரை
2. பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை மேம்பாலம் மூடப்பட்டுள்ளது.
3. காமாட்சி மருத்துவமனை முதல் ஈச்சங்காடு சந்திப்பு மற்றும் 200 அடி சாலை மூடப்பட்டுள்ளது.
4. 400 அடி வெளிவட்ட சாலை, வண்டலூர் முதல் பூந்தமல்லி சர்வீஸ் சாலை
5. சிட்லப்பாக்கம் முதல் மாம்பாக்கம் சாலை
6. தாம்பரம் - முடிச்சூர் சாலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT