கோப்புப்படம் 
தமிழ்நாடு

மிக்ஜம் புயல் எதிரொலி 6 ரயில்கள் சேவை ரத்து 

சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் 6 ரயில்கள் திங்கள்கிழமை(டிச.4) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN


சென்னை: சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் 6 ரயில்கள் சேவை திங்கள்கிழமை(டிச.4) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மேலும், பல்வேறு பிரதான சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளது. இதனால், காலைமுதலே மாநகரப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,மிக்ஜம் புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் இருந்து புறப்படும் 6 ரயில்கள் சேவை திங்கள்கிழமை(டிச.4)ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை-மைசுரு சதாப்தி, சென்னை-கோவை விரைவு ரயில், சென்னை-கோவை சதாப்தி, சென்னை-பெங்களூரு ஏசி டபுள் டக்கர், சென்னை-பெங்களூரு பிருந்தாவன், சென்னை-திருப்பதி சப்தகிரி ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT