முகப்பு
தமிழ்நாடு

15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 4 டிசம்பர், 2023 at 9:00 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:51 PM

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

Advertisement

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.