தமிழ்நாடு

திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்: சென்னை, 6 மாவட்டங்களில் கனமழை தொடரும்!

திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

DIN

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அதிகபட்சமாக ஆவடியில் 280 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிக்ஜம் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னை கடற்கரை அருகே உள்ளது. தொடர்ந்து, ஆந்திர கரையை நோக்கி நகர்ந்து நாளை காலை கரையைக் கடக்கவுள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT