முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரான நிலையில் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:22 PM
ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை(கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரான நிலையில் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

‘மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததாலும், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலைமுதல் பல்வேறு முக்கிய சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், தற்போது போக்குவரத்து சீராகியுள்ளது.

சென்னை தாம்பரத்திலிருந்து அண்ணா சாலை வரை ஜி.எஸ்.டி. சாலையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்து தடையின்றி இயங்கி வருகின்றது.

புழல் ஏரியில் நீர் திறக்கப்பட்டு வருவதால் மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாம்பாக்கம் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கணேசபுரம், செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை - அரங்கநாதன், சி.பி. சாலை, வியாசர்பாடி,  திருவொற்றியூர், மாணிக்கம் நகர், சூளைமேடு லயோலா, கதிர்வேடு ஆகிய சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →