கோப்புப்படம் 
தமிழ்நாடு

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு விளக்கம்

புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

DIN


சென்னை:  வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு இடையே புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

புழல் ஏரியின் எரை உடையும் அபாயத்தில் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி 20 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. நீர்வரத்து 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக மிக்ஜம் புயலினால் அதிக அளவி கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர்வர்த்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரிநீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது.

இதனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின்பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்குச் சுவரின் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன அப்ரோன் சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இது ஏரியின் எஃப்டிஎல்ஐ விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது.

தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக்கொள்ளப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT