கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் காய்கறிகள் விலை உயர்வு!

மிக்ஜம் புயலின் போது பெய்த கனமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

DIN

மிக்ஜம் புயலின் போது பெய்த கனமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் மொத்த விற்பனை அங்காடியான கோயம்பேடு சந்தையில் தக்காளி மட்டுமின்றி அவரை, இஞ்சி உள்பட பல்வேறு காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.55, தக்காளி ரூ.35, இஞ்சி ரூ.90, அவரை ரூ.50 வரை விற்கப்படுகிறது. வரத்து சீரானதும் ஓரிரு நாள்களில் காய்கறிகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ரயிலில் தற்படம் எடுத்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து காயம்

ராசிபுரத்தில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி

இனாம்குளத்தூரில் அக். 22-இல் மின்தடை

மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை! ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை!

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT