சென்னையை புரட்டிப்போட்டுவிட்டு நாட்டின் வடக்கு நோக்கி நகர்ந்திருக்கிறது மிக்ஜம் புயல். இந்த நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு சென்னைக்கு ஓய்வும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலைக்கு ஓய்வு விடுவதற்கான நேரம் வந்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. 2024-ல் இப்படியெல்லாம் நடக்குமா? பாபா வங்காவின் கணிப்புகள்
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, சென்னை வானிலையிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நேரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு (கேடிசிசி) மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். இருப்பினும், அதைப் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாது,
ஒவ்வொரு முறையும் மழை அறிவிப்பு வெளியிடப்படும் போது, அது உளவியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். சாதாரண மழைக்கு அச்சமடைய வேண்டாம்.
அடுத்த 2 வாரங்களில் சென்னையைத் தாக்க எந்தப் புயலும் வராது. சென்னை நகரைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க மழையானது டிசம்பர் 20 - 24 க்கு இடையில் இருக்கலாம். எனினும், அதனை உறுதிப்படுத்த இன்னும் அதிக நேரம் உள்ளது. இப்போதைய நிலையில், நிவாரணப் பணிகள்தான் முக்கியம், மழையோ, புயல் வதந்தியோ அல்ல.
அரபிக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 2 நாள்களில் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்யும் என்று பதிவிட்டிருக்கிறார்.
***
அரபிக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். இதனைப்போலவே, இதர உள் மாவட்டங்களாக திருச்சி, பெரம்பலூர், கரூர், டெல்டா பகுதிகள் உள்ளிட்டவையும் நல்ல மழையைப் பெறும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வடக்கு உள்மாவட்டங்களைத் தவிர்த்து பிற அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள உள்ள மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
***
கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள உள்ள மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல், குன்னூர், ஈரோடு, கோவை மற்றும் திருப்பூரின் ஒரு சில பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
கேரளத்திலும் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு எம்ஜிஒ நம் பக்கம் வந்திருப்பதால், பருவமழைக் காலம் ஜனவரி வரை நீளும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.