முகப்பு
தமிழ்நாடு

வாளி தண்ணீரில் மூழ்கிய ஒரு வயது குழந்தை...

வாளி நீரில் ஒரு வயது குழந்தை மூழ்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:23 PM
மாதிரி படம் (கோப்பு)
பகிர்:

ஈரோடு: சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பிகாரைச் சேர்ந்த அருண்குமார் (32) சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்திக் கூடத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சாந்தினி, 11 வயது பெண் மற்றும் 1 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்

வியாழக்கிழமை காலை அருண்குமார் வேலைக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அவரது மூத்த மகளும் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

பிற்பகலில் குழந்தையைத் தூங்க செய்த பின் சாந்தினி உறங்கியுள்ளார். மாலை எழுந்த பார்த்தபோது குழந்தையைக் காணாது பதறி அருகில் உள்ளவர்களுடன் தேட ஆரம்பித்துள்ளார்கள்

வீட்டின் பின்புறமிருந்த வாளி தண்ணீரில் குழந்தை மூழ்கியிருப்பதைக் கண்டுள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →