தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை,புறநகா் பகுதிகள் முற்றிலும் மீளாத நிலையில் சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோயம்புத்தூா், தஞ்சாவூா் உள்பட 15 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.8) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூா், நீலகிரி, ஈரோடு,திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை(டிச.8) மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். நகரில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT