தமிழ்நாடு

உதகை மலை ரயில் மேலும் இரு நாள்களுக்கு ரத்து!

DIN

நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, உதகை மலை ரயில் சேவை மேலும் இரு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் கடந்த நவ. 22 ஆம் தேதி முதல் உதகை-குன்னூா் இடையேயான மலை ரயில் சேவை  கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. 

சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நேற்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக ரத்தானது. 

இதையடுத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு கருதி மேலும் இரு நாள்களுக்கு (டிச. 9, 10) உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: இந்திய அணிகளுக்கு வெள்ளி

SCROLL FOR NEXT