தமிழ்நாடு

ஏரிகள் உடைந்ததால் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் வெள்ளம்: அமைச்சர்

DIN

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒருவர் கூட விடுபட்டுப்போகாத வகையில் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். 

ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால்தான் பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் பாதிப்பு அதிகமானது. செங்கல்பட்டில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதாலும் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது. 

எந்த ஆண்டு பருவமழையோடும் ஒப்பிட முடியாத வகையில் வரலாறு காணாத மழை இந்த ஆண்டு பெய்துள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் தேங்கிய மழைநீர் மோட்டார்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன. 

பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம்  7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.  டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையான  மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.

வெள்ள பாதிப்புகள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமாருக்கு தார்மீக உரிமை கிடையாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்மா ஆங் சான் சூச்சி

மும்பையில் பலத்த காற்றுடன் மழை: விளம்பர பதாகை விழுந்ததில் பலர் காயம்!

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் முதல் ஐக்கிய அரபு அமீரக வீரர்!

பெருமை கொள்ள வைத்தவர்

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமி கார்மைக்கேல்

SCROLL FOR NEXT