கோப்புப் படம் 
தமிழ்நாடு

புயல் நிவாரணத் தொகையை உயர்த்த தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்!

மக்கள் தங்கள் உடமைகளையும் வருமானத்தையும் இழந்துள்ளதால் புயல் நிவாரணத்தை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக திமுக அரசு உயர்த்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

DIN

சென்னை: மிக்ஜம் புயலால் மக்கள் தங்கள் உடமைகளையும் வருமானத்தையும் இழந்த நிலையில், புயல் நிவாரணத் தொகையான ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக திமுக அரசு உயர்த்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக முடிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, வெள்ளப்பெருக்கைத் தடுக்க அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தினம் ஊதியம் பெறுவோர் மற்றும் நடுத்தர மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானத்தை இழந்த நிலையில், அவர்கள் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அவர்களின் உடமைகள் என அனைத்தும் இழந்தனர். எனவே, வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.6,000 உதவித் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி நிவாரண உதவி வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.17,000 முதல் ரூ.25,000 வரை பயிர் இழப்பு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

மழை நீரில் மூழ்கிய வாகனங்களை பழுதுபார்க்கும் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்த தொழில் நிறுவனங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

நெல் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ஹெக்டேருக்கு ரூ.13,500ல் இருந்து ரூ.17,000-ஆக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 9-ம் தேதி அறிவித்தார். அதே வேளையில் மானாவாரி பயிர்களுக்கான இழப்பீடு ஹெக்டேருக்கு ரூ.7,410-ல் இருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT