முகப்பு
தமிழ்நாடு

3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:24 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதேபோன்று நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ஞாயிற்றுக்கிழமை (டிச.10) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →