தமிழ்நாடு

இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமிக்கப்பட்டாரா?- சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி 

இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வு விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய விளையாட்டுத் துறை அனுராக் சிங் தாகுர் பதிலளித்துள்ளார். 

DIN

இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வு விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய விளையாட்டுத் துறை அனுராக் சிங் தாகுர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரிடம், இந்தியக் கால்பந்து குழு வீரர்களை தேர்ந்தெடுக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஜோதிடர் ஒருவரின் பணியை பயன்படுத்தியுள்ளதாக வந்துள்ள செய்தி அரசுக்கு தெரியுமா? தெரியும் எனில் விவரங்களை தாருங்கள்... இப்படிப்பட்ட செயல்பாடுகள் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா? இது குறித்து அரசு ஏதேனும் அறிவுரைகளை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதா? என்று நட்சத்திரக் கேள்வி எண் 38/05.12.2023 வாயிலாக சு. வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் அனுராக் சிங் தாகுர், இப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (எ) ராகுல் மேரா மற்றும் இதரர் வழக்கு (எண் 3047-48 : 2022) தொடர்புடையது; உச்ச நீதிமன்ற ஆணையின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள தடய தணிக்கை அறிக்கை வரம்பிற்குள் வரக் கூடியது; உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு சட்ட ஆலோசகர் அந்த அறிக்கையை சீல் இடப்பட்ட உறையில் தந்துள்ளார்; எனவே இது குறித்த விவரங்களை அரசு பகிர்ந்து கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT