தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு: மதிமுக சார்பில் ரூ. 10.2 லட்சம் நிதி

வெள்ள நிவாரண நிதியாக மதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்து 20 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. 

DIN

வெள்ள நிவாரண நிதியாக மதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்து 20 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். 

அதன்படி, அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மதிமுக சார்பில் கட்சியின் எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் இணைந்து ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நேரில் சந்தித்து  இதற்கான காசோலையை வழங்கினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

SCROLL FOR NEXT