தமிழ்நாடு

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

DIN


தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடியில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை  துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில்,ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.இதையடுத்து தண்டவாளத்தை சீரமைத்து ரயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தென்மாவட்டங்களில் சென்னை நோக்கி செல்லும் பயணிகள் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை,செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது மற்றும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.ரயில்கள் தாமதமாக புறப்படும் என அறிவித்துள்ளது. 

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT