மிக்ஜம் புயல் மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.  
தமிழ்நாடு

இந்திய கம்யூ. கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி!

மிக்ஜம் புயல் மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. 

DIN

மிக்ஜம் புயல் மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. 

மிக்ஜம்  புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். 

அதன்படி பல்வேறு கட்சிகளின் சார்பிலும் மேலும் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  இரா.முத்தரசன், முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மிக்ஜம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத சம்பளத் தொகைக்கான காசோலையும் வழங்கினார். 

மேலும் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் பலரும் புயல் மீட்புப் பணிகளுக்காக நிதி அளித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT