முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் பங்கேற்பு

தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுள்ளார்.

Updated On : 14 டிசம்பர், 2023 at 11:57 AM
படம்: எக்ஸ்
பகிர்:


சென்னை: தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுள்ளார்.

தேமுதிவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் பணி மற்றும் கூட்டணி தொடா்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற உள்ளாா்.

Advertisement

இந்த நிலையில், உடல்நலப் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள விஜயகாந்த்தும் பங்கேற்றுள்ளார்.

பொதுக்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த விஜயகாந்துக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.