சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம். 
தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச.26-ல் உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் டிச.26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் டிச.26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த் திருவிழாவினை முன்னிட்டு டிச.26 (செவ்வாய்க்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலகங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வரும் ஜன.20 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT