தமிழ்நாடு

மணலி சிபிசில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

சென்னையை அடுத்த மணலியில் அமைந்துள்ள சிபிசிஎல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

சென்னை: சென்னையை அடுத்த மணலியில் அமைந்துள்ள சிபிசிஎல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையை அடுத்த மணலியில் இயங்கி வருகிறது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) நிறுவனம். அண்மையில் மிக்ஜம் புயல் காரணமாக, இங்கிருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

சிபிசிஎல் தொழிற்சாலையில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், மழைநீருடன் கச்சா எண்ணெயும் கலந்து பக்கிங்காம் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  ஆனால், சிபிசிஎல் மணலி சுத்திகரிப்பு ஆலையில் கச்சா எண்ணெய்க் குழாயில் கசிவுகள் ஏதும் இல்லை என்று மறுத்திருந்தது.

இந்த நிலையில், சிபிசில் தொழிற்சாலையில் சனிக்கிழமை முற்பகலில் தீ விபத்து நேரிட்டுள்ளது. தீ விபத்தால் சிபிசிஎல் ஆலை பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT