தமிழ்நாடு

3 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

DIN

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

டிச. 16ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 

கடலுர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்களை மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகிள்ல ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

டிச.17, 18-ல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

கடலூர் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். 

மீனவர்கள் தென்கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

SCROLL FOR NEXT