கோப்புப் படம் 
தமிழ்நாடு

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை முதலே தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 10 மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்துள்ளது. 

மேலும், தென்மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். 

உயர்கல்வி வகுப்புகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாளை (டிச. 18) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக் கழக துணை வேந்தர் சந்திரசேகர்  சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT