தமிழ்நாடு

திருச்சியில் கட்டட தொழிலாளி அடித்துக் கொலை

திருச்சியில் கட்டட தொழிலாளி ஒருவர் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

DIN

திருச்சி: திருச்சியில் கட்டட தொழிலாளி ஒருவர் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் குணசேகர்  (55).கட்டடத் தொழிலாளியான (கொத்தனார்) இவருக்கு, ராணி என்ற மனைவியும்,விஜயகுமார்,
தர்மா என்ற இரு மகன்களும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி, குழந்தைகளையை பிரிந்து தனியாக வசித்து வந்தார் குணசேகர்.

மது பழக்கத்திற்கு அடிமையான அவர்  மதுபோதையில்  ஆங்காங்கே கண்ட இடங்களிலும்,சாலை ஒரத்திலும் உறங்குவது வழக்கம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குணசேகர்,உறையூர் ராமலிங்க நகர் அருகே சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் நண்பர்கள் குணசேகரை சரமாரியாக கைகள் மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் அடிபட்ட குணசேகரனை, நண்பர்கள் அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டனர்.

திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது குணசேகர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் போலீசார் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT