முகப்பு
தமிழ்நாடு

மழை பாதிப்பு: தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு

மழை வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:28 PM
பகிர்:

மழை வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மழை வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். அப்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரையும் அவர் நேரில் சந்திக்கிறார். 

இதனிடையே எடப்பாடி பழனிசாமிவெளியிட்ட அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கிட இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் ஏற்பட்டதுபோல் கவனக் குறைவுடன் மக்களை பாதிக்கப்படவிடாமல், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், காவல் பணி அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். 

மேலும், கனமழையில் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கிட  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →