அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சொர்க்கவாசல் திறப்பு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்  சிறப்பு தரிசனம் ரத்து

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பன்று, சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

DIN

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பன்று, சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது:

"வைகுண்ட ஏகாததி விழாவின்போது மக்களுக்கு தேவையான வசதிகள் செய்துதரப்படும். முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பக்தர்களை வரிசையில் காக்க வைக்காமல் இருக்க சொர்க்கவாசல் திறப்பன்று, சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாததியன்று பொது தரிசனத்தில் மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

முன்வாசல் கோபுரம் வழியாக பொது தரிசனமும், பின்புற கோபுர வாசலில் சொர்க்க வாசல் தரிசனமும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70வது வயது மூத்த குடிமக்களுக்கும் தனிவரிசை அமைக்கப்படும்.

காலை 2.30 மணிக்கு திறக்கப்படும் சொர்க்க வாசலின்போது 1500 பேருக்கும், உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்களுகள் 850 பேருக்கும் அனுமதி அளிக்கப்படவுள்ளது" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT