தமிழ்நாடு

நெல்லை, தூத்துக்குடியில் நாளை முதல்வர் நேரில் ஆய்வு!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். 

DIN

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். 

கடந்த இரு தினங்களாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. அதி கனமழையானது 4 மாவட்டங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்றும் அதிகனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். 

தில்லியில் கேஜரிவாலை சந்திக்கச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், 

நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார். 

வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட தென் மாவட்டங்களில் அதிகளவு கனமழை பெய்துள்ளது. இதனால் பாதிப்பும் அதிகரித்துள்ளது. 

சென்னையில் எவ்வளவு விரைவாக மீட்புப் பணிகள் நடைபெற்றதோ,  அதே அளவுக்கு தென்மாவட்டங்களிலும் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT