முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Updated On : 22 டிசம்பர், 2023 at 11:47 AM
பகிர்:

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் காலஅவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து, அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பொன்முடி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழக்கு குறித்து பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின், நேற்றிரவுதான் சென்னை திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.