கோப்புப்படம் 
தமிழ்நாடு

தென் மாவட்ட மாணவா்களுக்கு புத்தகம், கூடுதலாக சீருடை: பள்ளிக் கல்வித் துறை

பெரு மழை பேரிடரால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவா்களுக்கு புத்தகம்,கூடுதலாக இரண்டு இணைச் சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக

DIN


சென்னை: பெரு மழை பேரிடரால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவா்களுக்கு புத்தகம்,கூடுதலாக இரண்டு இணைச் சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் நேரிட்டுள்ளன.

அந்த நான்கு மாவட்டங்களிலும் நேரில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா், சில அறிவுரைகளை வழங்கினாா். 

அதன்படி, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பைகள் மற்றும் கூடுதலாக இரண்டு இணைச் ஜோடி சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT