தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

DIN

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, தமிழக அரசு அறிவித்த ரூ.6,000க்கு பதில் ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை, இறந்த கால்நடைகளை அகற்றி நோய் பரவாமல் தடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனிடையே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் லேசான பாதிப்புக்குள்ளான வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண  தொகை வழங்கப்படும்.

அதுபோல, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும். சென்னையைப் போலவே, தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என்று உறுதியளிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

தலையில் முண்டாசு, கருப்புநிற கோட்டு...

மனித நேயம்...

சிவப்பு அவல்

நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT