கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை(டிச.24-29) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (மதியம் 1 மணி வரை) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொண்டாட்டம்... ரித்தி டோக்ரா!

அவுட்டிங்... மோனிஷா பிளஸ்ஸி!

இரு - இருக்க முயலாதே... மாதுரி ஜெயின்!

கலப்பட இருமல் மருந்து விவகாரம்: கைது செய்யப்பட்ட மருத்துவருக்கு எதிராக ம.பி. மருத்துவர்கள் போராட்டம்

சர்க்கரை + மசாலா... மெழுகுச் சிலை... மோனாமி கோஷ்!

SCROLL FOR NEXT