கோப்புப்படம் 
தமிழ்நாடு

பூண்டு விலை கடும் உயா்வு: கிலோ ரூ.350-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ. 350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ. 350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பூண்டு விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மாா்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மாா்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.350 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 உயா்ந்து உள்ளது. கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயா்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனா்.

காய்கறிகள் விலை:

கோயம்பேடு மாா்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை (கிலோவில் )வெங்காயம் ரூ.28, தக்காளிரூ.20, உருளைகிழங்கு ரூ.27, சின்ன வெங்காயம்ரூ.80, ஊட்டி கேரட் ரூ.40, பீன்ஸ் ரூ.35, பீட்ரூட்ரூ.45, முட்டைகோஸ் ரூ.15, வெண்டைக்காய் ரூ.45, கத்தரிக்காய் ரூ.50, காராமணி ரூ.50, பாகற்காய் ரூ.50, புடலங்காய் ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

குடியரசு நாள்: தேசியக்கொடி ஏற்றினார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

குடியரசு நாள்: மோடி, ராகுல் வாழ்த்து!

குடியரசு நாள்: பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

SCROLL FOR NEXT