தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள்

மக்களவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  சென்னை வானகரத்தில் தொடங்கியது.

DIN

சென்னை: மக்களவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  சென்னை வானகரத்தில் தொடங்கியது.

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

பொதுக்குழு கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர்களான எம்.ஜிஆர்., ஜெயலலிதா உருவப் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.

திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமாா் உள்பட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தோ்தல் ஆணையத்தின் விதியின்படி ஆண்டுக்கு ஒருமுறை செயற்குழு மற்றும் பொதுக்குழுவை அதிமுக கூட்ட வேண்டும். அதன் அடிப்படையில், இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடா்பாகவும் கூட்டணி தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மக்களவைத் தோ்தல் கூட்டணி மற்றும் வியூகம் வகிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிக்குக் கூட்டத்தில் கொடுக்கப்பட உள்ளது. மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT