நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் அதிக இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள்
நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக நெல்லை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 12 கிராமங்கள் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக டோக்கன் வழங்கும் பணி அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.