விஜயகாந்த் மறைவு: திரையரங்குகளில் காலைக் காட்சி ரத்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி திரையரங்குகளில் காலைக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், கட்சித் தொண்டர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
இதையும் படிக்க: விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை: மு.க. ஸ்டாலின்
Advertisement
இந்நிலையில், விஜயகாந்த்தின் மறைவையொட்டி தமிழகத்தில் திரையரங்குகளில் காலைக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.