தமிழ்நாடு

அவர் ஒரு கடவுள் - துணை நடிகர்கள் உருக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

DIN

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களும் விஜயகாந்த் மறைக்கு வருத்தத்தைப் பதிவிட்டுள்ளனர். 

முக்கியமாக, பல துணை நடிகர்கள் நேரில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உருக்கமாக பேசி வருகின்றனர். 

இயக்குநரும் நடிகருமான சிங்கம் புலி, “பல நடிகர்களின் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுத்தவர் விஜயகாந்த். யாரும் அவரைத் தவறாக பேச முடியாத அளவுக்கே தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அனைவர் மீதும் பாசமாக இருப்பவர். அவர் ஒரு கடவுள்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் ஆனந்த் ராஜ், “ வாழ்க்கையில் நிறைய விசயங்களை இழந்திருப்போம். இது ஒரு வேதனையான ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. எல்லாரையும் மரியாதையாக நடத்துபவர் விஜயகாந்த். என் குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல் இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் வையாபுரியும் உருக்கமாகப் பேசினார். முன்னதாக, நடிகர்கள் பொன்னம்பலம், மறைந்த போண்டா மணி உள்ளிட்ட பல துணை நடிகர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் எங்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்திருப்பார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT