முகப்பு
தமிழ்நாடு

விஜயகாந்த் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:32 PM
கோப்புப்படம்
பகிர்:

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், பிரதமர் மோடி விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ் திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். தனது சிறப்பான நடிப்பால் கோடான கோடி மக்களின் இதயங்களை வென்றவர்.

பொதுசேவையில் முழுமையாக தன்மை ஈடுபடுத்திக்கொண்ட அரசியல் தலைவர் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் விஜயகாந்த். அவரின் மறைவு மிகவும் வேதனையளிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →