நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை முன்பு நலம்பெற வேண்டி காத்திருந்த தொண்டர்கள் கேப்டன்... கேப்டன்... என தொண்டர்கள் கதறி அழுதனர்.
விஜயகாந்த் காலமானாதை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல், அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
இதையம் படிக்க | விஜயகாந்த் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விஜயகாந்த் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் பதிவு :
தேமுதிக நிறுவனர் விஜய்காந்த் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்; அவருடைய குடும்பத்தினருக்கும் அக்கட்சியின் செயல் வீரர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.