இறுதி நிகழ்ச்சிக்கு அரசு முழு ஏற்பாடு
தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வுக்கான முழு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து கொடுத்திருந்தது. சென்னை தீவுத் திடலில் உடலை வைக்கவும்,
தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வுக்கான முழு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து கொடுத்திருந்தது. சென்னை தீவுத் திடலில் உடலை வைக்கவும், தேமுதிக அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் அரசால் செய்து தரப்பட்டன.
பொது மக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடலை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான தீவுத் திடலில் வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்துடன், தீவுத்திடலிலிருந்து, அடக்கம் செய்யப்படவுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு உடலை எடுத்துச் செல்வதற்கான வாகனத்துடன் அதில் மலா் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை பெருநகர சென்னை மாநகராட்சி செய்து கொடுத்தது. இதேபோன்று, தேமுதிக தலைமை அலுவலகத்தில் இறுதி மரியாதை மற்றும் நல்லடக்கத்துக்கான ஏற்பாடுகளும் அரசின் சாா்பில் அளிக்கப்பட்டன.