முகப்பு
தமிழ்நாடு

மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை இழந்துவிட்டோம்: நிர்மலா சீதாராமன்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

உடல்நலக் குறைவால் நேற்று இறந்த தேமுதிக விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். 

மத்திய அரசின் சார்பாக பிரதமர் மோடி தன்னை அனுப்பிவைத்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பிரதமர் மோடியின் அன்பை முழுமையாகப் பெற்றவர் விஜயகாந்த்.மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்க்கமுடியாத அளவுக்கு இளகிய மனம் கொண்டவரும், அனைவரின் கஷ்டங்களையும் புரிந்து அவர்களுக்கு மரியாதைக் கொடுத்தவர். 

அரசியலில் விஜயகாந்த்தினை போல மனித நேயம் கொண்ட ஒரு தலைவரைப் பார்ப்பது அரிது. தன் பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய ஒரு நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்று அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →