தமிழ்நாடு

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: 4 அமைச்சர்கள் வழங்கினர்

DIN

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வெள்ள நிவாரணத்தொகை ரூ.6,000  மற்றும் 5 கிலோ அரிசி வழங்கியதற்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து மகிழ்ச்சியோடு பெற்று சென்றனர் என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். 

தூத்துக்குடி வட்டம் மாப்பிள்ளையூரணிரூபவ் மாசிலாமணிபுரம் மற்றும் மூன்றாம் மைல் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் அமுதம் நியாய விலைக்கடைகளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் சமூகநலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்அர.சக்கரபாணி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை  உறுப்பினர் எம்.சி.சண்முகையா  ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ரூ.6,000 நிவாரணத்தொகை ஆகியவற்றை வழங்கினார்கள்.

பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக தூத்துக்குடி வட்டம் மாப்பிள்ளையூரணி, மாசிலாமணிபுரம்,  மூன்றாம் மைல் ஆகிய பகுதிகளில் மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அமைச்சர் பெருமக்களாகிய நாங்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தோம். மேலும் இந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் அமுதம் நியாய விலைக்கடைகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  முதல்வர் அறிவித்த 5 கிலோ அரிசி மற்றும் ரூ.6000 நிவாரணத்தொகை ஆகியவற்றை வழங்கினோம்.

வெள்ள நிவாரணத்தொகை மற்றும் 5 கிலோ தரமான அரிசி வழங்கியதற்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து மகிழ்ச்சியோடு அவற்றை பெற்று சென்றனர். மேலும் நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட அரிசி நல்லமுறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம் என  அமைச்சர்
அர.சக்கரபாணி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

பாஜக ஆா்ப்பாட்டம்: 103 போ் மீது வழக்குப் பதிவு

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமனம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா்

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT