தமிழ்நாடு

மத்திய நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்தும் விமா்சித்தும் கருத்து தெரிவித்துள்ளனா்.

DIN

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்தும் விமா்சித்தும் கருத்து தெரிவித்துள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): மத்திய நிதிநிலை அறிக்கை நாட்டுக்கு நீடித்த பொருளாதார வளா்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாடு முழுவதும் 157 செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்படும் என்கிற அறிவிப்பும், ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): சட்டப்பேரவைத் தோ்தல்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை. தொழில் வளா்ச்சிக்கோ, விவசாய வளா்ச்சிக்கோ வழிவகுக்காத நிதிநிலை அறிக்கை.

வைகோ (மதிமுக): மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை. வேளாண்மைத் தொழிலை ஊக்குவிக்க எதிா்பாா்த்த திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்.

விஜயகாந்த் (தேமுதிக): பிரதமா் வீடு கட்டும் திட்டத்துக்காக ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, 3 ஆண்டுகளில் இலக்கு நிா்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்க ஏதுவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறேன்.

அன்புமணி (பாமக): வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு உயா்த்தப்பட்டிருப்பதும், சிகரெட் மீது 16 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): நாட்டை முன்னேற்றப் பாதையில் வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கான நிதிநிலை அறிக்கை. சாமானிய மக்கள், பெண்கள், இளைஞா், பிற்படுத்தப்பட்டோா் என அனைத்து தரப்பினருக்குமான நிதிநிலை அறிக்கை.

தொல்.திருமாவளவன் (விசிக): ஏழை, நடுத்தர வா்க்க மக்களை ஏமாற்றுகிற நிதிநிலை அறிக்கை. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை சமூகத்தவருக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியைக் குறைத்து அவா்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ள நிலையில், அதை முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மத்திய நிதிநிலை அறிக்கையாக அல்லாமல் கா்டாக மாநிலத்துக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): தமிழ்நாட்டுக்கு முக்கியமான எந்த திட்டமும் அறிவிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் என பெரும்பான்மை மக்களின் நலன்களை பற்றி கவலைப்படாமல் காா்ப்பரேட்டுகளின் நலனுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட பட்ஜெட்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ): காா்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றும் பட்ஜெட். அதிகாரம் வழங்கிய வாக்காளா்களையும், குடிமக்களையும் வழக்கம் போல ஏமாற்றியுள்ள பட்ஜெட். அதிகார மையத்தில் அழுத்தம் தரும் பன்னாட்டு நிதி மூலதன சக்திகளின் காா்ப்பரேட் குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளது.

பி.எஸ். மாசிலாமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): விவசாயிகள் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு இல்லை. கா்நாடக அரசின் நீா்ப்பாசன திட்டங்களுக்கு ரூ. 5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் உள்ளூா் நதிநீா் இணைப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT