முகப்பு
தமிழ்நாடு

திருவாரூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2023 at 7:52 PM
கோப்புப் படம்
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நன்னிலம் குடவாசல் குளிக்கரை மாங்குடி சன்னாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் இரவு நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.