அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவிலுள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். 

DIN

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவிலுள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். 

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாள் இன்று (பிப். 3) அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினரின் அமைதிப்பேரணி நடைபெற்றது. 

சென்னை வாலாஜா சாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பேரணி மேற்கொண்டு அண்ணா நினைவிடத்திற்கு வந்தனர்.

அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணா நினைவிடத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். உடன் இருந்த மற்ற நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். 

இதில், துரைமுருகன், டி.ஆர். பாலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

வேன் பதிப்புக்கு... ராகுல் பேச்சால் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT