கோப்புப் படம் 
தமிழ்நாடு

தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நன்னிலம் குடவாசல் குளிக்கரை மாங்குடி சன்னாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

இதனால், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT